கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரிட்டனில் இருக்கும் இளைஞர்கள் ஆபாச படங்களை பார்த்திருப்பதாக மீடியா ரெகுலேட்டர் அப்கொம் (media regulator Ofcom) தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி ,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு கடுமையான ஊரங்கு கட்டுப்பாடுகள் பிரிட்டனில் போடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் வீட்டில் முடங்கியிருந்த இளைஞர்கள் வீடியோ கேம் மற்றும் ஒன்லைனில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர்.

இதுகுறித்த டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் (media regulator Ofcom), பிரிட்டனில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வெப்சைட்கள் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது.

அதற்கமைய ,செப்டம்பர் 2020இல் மட்டும் இங்கிலாந்தைச் சேர்ந்த 26 மில்லியன் பேர் ஆபாச வெப்சைட்கள் மற்றும் செயலிகளை பார்த்துள்ளனர். அதில், நான்கில் 3 பகுதியினர் பருவ வயது இளைஞர்கள் என தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, பிரிட்டனில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் அந்தப் படங்களை பார்த்துள்ளனர். இளைஞர்கள் மட்டுமே அந்தப் படங்கள் இருக்கும் தளங்களையும், செயலிகளையும் உபயோகப்படுத்தவில்லை. பெண்களும் பார்த்துள்ளனர். media regulator Ofcom சேகரித்துள்ள தரவுகளின்படி 16 விழுக்காடு இங்கிலாந்து பெண்கள் ஆபாச வெப்சைட் மற்றும் செயலிகளுக்கு சென்றுள்ளனர்.

ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை நெறிமுறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வை மேற்கொண்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா ஊரங்கு அமலுக்கு வந்தபிறகு இன்டர்நெட் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆன்லைன் கல்வி மற்றும் வீட்டில் இருந்து வேலை, பொழுதுபோக்கு என சகலத்துக்கும் ஒன்லைன் தேவைப்பட்டது. சராசரியாக ஒருவர் நாள்ளொன்றுக்கு ஆன்லைன் பயன்படுத்தும் விகிதம் 3 மணி நேரம் 37 நிமிடங்களாக 2019இல் இருந்தது.

சோஷியல் மீடியா வீடியோ தளங்களுக்கு பிரிட்டனில் இணையம் பயன்படுத்தும் 97 விழுக்காடு இளைஞர்கள் பார்வையிடுவதாகவும், 3 முதல் 4 வயது இருக்கும் குழந்தைகளில் 93 விழுக்காட்டினரும் வீடியோ தளங்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளது.

மேலும் ,18 முதல் 24 வயதுடைய பதின்பருவத்தினர் அதிகமாக வீடியோ தளங்களை உபயோகிக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் சராசரியாக 1 மணி நேரம் 16 நிமிடங்கள் யூடியூப் தளத்தில் செலவிட்ட அவர்கள், தற்போது 11 நிமிடங்கள் அதிகரித்து 1 மணி நேரம் 27 நிமிடங்களை செலவிடுவது தெரியவந்துள்ளது. டிக் டொக் செயலியின் வருகைக்கு பின்னர், அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2019ல் 3 மில்லியனாக இருந்த யூசர்கள், 2021 மார்ச் மாதம் 14 மில்லியனாக உயர்ந்துள்ளனர். பதின்பருவத்தினரே டிக்டாக் செயலியை அதிகமாக உபயோகிப்படுத்துகின்றனர்.