இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தன்னுடைய மகன் ஏ.ஆர்.அமீனுடன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்துவது போல், புகைப்படம் வெளியிட்ட நிலையில் இவர் வெளியிட்டிருந்ததும் மக்களுக்கு தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கும் விதமாகவே அமைந்தது.

இந்நிலையில் இந்த மாஸ்க் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இந்த மாஸ்க் எல்ஜி பியூரிகேர் என கூறப்படும் காற்று சுத்திகரிப்பு மாஸ்க், இந்த மாஸ்கின் விலை சுமார் 14,000 ரூபாய் என கூறப்படுகிறது. இந்த காற்று சுத்திகரிக்கப்பட்ட முகமூடியில் 'ஹெப்பா பில்ட்டர்' உள்ளது. இது மக்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகிறது சுவாசத்தை வழங்குகிறது. இந்த முகமூடிக்குள் இரட்டை இன்வெர்ட்டர் போன்ற கருவிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.