கர்ப்பிணி பெண்களுக்கு இப்போது கர்ப்ப காலத்தில் எந்த கட்டத்திலும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார இயக்குநர் வைத்தியர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் புதிய தடுப்பூசி தொடர்பாக ஊடக சந்திப்பில் பேசிய ப்ளூம்ஃபீல்ட், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் கூடுதல் ஆபத்துகள் இல்லை என்பதை உலகம் முழுவதிலுமிருந்து தரவுகள் காட்டியுள்ளன, குறிப்பாக ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசி மூலம் எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.