கனடாவின் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள மக்களிடையே அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு மர்மமான மூளை நோய் பரவி பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த மூளை நோய் எங்கிருந்து பரவுகிறது என்பது இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது கனடாவின் பல மருத்துவ நிபுணர்களையும், உயர் நரம்பியல் நிபுணர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.