ஆந்திராவில் ஜூன் பத்தாம் நாள் காலையுடன் முடிய இருந்த ஊரடங்கை மேலும் பத்து நாட்களுக்கு மாநில அரசு நீட்டித்துள்ளது.

ஆந்திராவில் சோதனைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் 25 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இருப்பினும் இன்று காலை நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 426 ஆக உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன்மோகன், ஜூன் 20ஆம் நாள் காலை வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். ஜூன் 10 முதல் ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இன்றியமையாப் பொருட்கள் விற்கும் கடைகளைத் திறக்கவும், பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது