பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும். இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியாகி இயல்பு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ராஜகுடும்பத்தில் நிலவர நிற வெறி மற்றும் பாகுபாடு காரணமாக இவர்கள் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த குழந்தைக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் மறைந்த தாயார் டயானாவின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. லில்லிபெட் "லில்லி" டயானா மவுண்ட்பேட்டன் - விண்ட்ஸர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இந்த குழந்தை பிறந்தது.