கனடாவிலேயே அதிக வயதுள்ள பெண் மரணம் அடைந்துள்ளார். 1907ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள Lincoln என்ற இடத்தில் பிறந்தவரான Phyllis Ridgway, Ernie என்பவரை திருமணம் செய்தபின் கனடாவை சொந்த வீடாக்கிக்கொண்டார்.

தம்பதியர் ரொரன்றோவில் வாழ்ந்துவந்த நிலையில், Ernie ஏற்கனவே மரணமடைந்துவிட்டார், Phyllis Ridgway நேற்று தனது 114ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

தனது குடும்பத்தார் சூழ்ந்திருக்க, Phyllis Ridgwayயின் உயிர் அமைதியாக பிரிந்ததாக அவரது பேத்தி Barbara தெரிவித்துள்ளார்.