தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் இருக்கும் தளர்வுகளோடு கூடிய கட்டுப்பாடுகளை பார்க்கலாம்.

இ-பாஸ் தேவைக்கான வழிமுறைகள்

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (HouseKeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

 

  • மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.

 

  • வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள்                      இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலு்ம வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோகளில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.