பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.