நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ஆக்லாந்து வழியாக புலம்பெயர்ந்தோர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும், “உடைந்த குடியேற்றக் கொள்கை" விதிகளில் மாற்றங்களை வேண்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகளில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கும், கொவிட் பரவலின்போது இங்கிருந்து வெளியில் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்ட குடும்பங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

நியூசிலாந்தில் நீண்ட காலமாக தங்கியுள்ள மக்களுக்கு வதிவிடத்திற்கான “உண்மையான” பாதைகளை உருவாக்குமாறு இந்தக் குழு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.

மேலும் ஆட்டோரோவா புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு அமைப்பாளர்கள் பேரணி கடந்த மே மாதம் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து விழிப்புணர்வு போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் கிறிஸ்ட்சர்ச், வெலிங்டன் மற்றும் ரோட்டோருவா மக்களும் தொலைதூரத்திலிருந்து வந்து கலந்து கொண்டனர்.