இந்தோனேசியாவில் நேற்றையதினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவின் சுலாவேசி நகரில் கொடமொபாகு பகுதியில் இருந்து 224 கி.மீ. தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.