அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 16,87,34,435 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13,61,55,250 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் கையாண்டு உள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்து உள்ளது.

அதேபோல்  தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் துணை ஜனாதிபதி  கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.