இஸ்ரேல் நாட்டின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதியும் பாரம்பரிய இஸ்ரேலிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசக் ஹெர்சாக் இஸ்ரேலின் தொழிற்கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2013 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்டவர். ஆனால் அந்தத் தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.