இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2,55,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளது.