அமெரிக்காவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகருக்கு வடக்கே 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.  நிலநடுக்கம் 41.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.