ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது ஒரு பீரங்கி குண்டு அங்கு ஒரு திருமண வீட்டில் விழுந்து வெடித்தது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமுற்றனர்.

குறித்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் காரணம் என அரசும், அரசுதான் காரணம் என தலீபான் பயங்கரவாத அமைப்பும் பரஸ்பர குற்றம்சாட்டியுள்ளன.

மேலும் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 1,783 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகம் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கியநாடுகள் குழு தெரிவித்துள்ளது.