அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து 7 பேர் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றபோது விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்து நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரதர்போர்ட் நகரை சேர்ந்த மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டது.

பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் ஏரியில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டதுடன் மற்ற 6 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.

அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.