இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2018ஆம் ஆண்டு முதல் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ்  உடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது.இதனைத்தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர்

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜொன்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு கிருஸ்தவ தேவாலயத்தில் இந்த ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.