கொரோனா தொற்று பரவலையடுத்து, இலங்கையில் 48 சதவீதமானவர்கள் புகைத்தலை கைவிட்டுள்ளனரென, போதை தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் ,இது சிறந்த முன்னேற்றகரமான செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த மத்திய நிலையமானது, புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாளாந்தம் 40 பேர் வரை உயிரிழக்கும் நிலையில், புகைப்பிடித்தலை கைவிடுவதால் உயிர்களைப் பாதுகாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.