கனடாவில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளியில் ( Kamloops Indian Residential School )215 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி ,இவர்கள் அனைவரும் பூர்வ குடியின குழந்தைகள் என்பதும், பெரும்பாலானோர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்பத, தெரியவந்துள்ளது.

மேலும் ,Truth and Reconciliation Commission of Canada என்ற அமைப்பினர், இவ்வாறு காணாமல் போன மற்றும் உயிரிழந்த சுமார் 4100 குழந்தைகளின் சடலங்களை தற்போதுவரை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர்? எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை.