சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விதத்தில் கார்ட்போர்ட் சவப்பெட்டிகள் தெஹிவளை- கல்கிசை மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் அனுமதியுடன் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முதல் முறையாக கொவிட் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் உடல் கொஹுவல பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் ,இந்த செயன்முறை மூலம் உடல்களை அடக்கம் செய்வதற்கு 10,000 ரூபா போதுமானது என தெஹிவளை – கல்கிசை மாநகர சபை முதல்வர் ஸ்டான்லி டயஸ் தெரிவித்தார்