நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு, இன்றிரவு 11 மணி முதல் மீண்டும் அமல்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துக்கொள்ளும் நோக்குடன் இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், மருத்து வகைகளை கொள்வனவு செய்ய இதனூடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் , பொதுமக்கள் தமது வீடுகளுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்ல முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

மேலும், சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் கூறுகின்றார்.

தமது வீடுகளுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு கால் நடையாக சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறு, அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

வீடொன்றிலிருந்து ஒரு நபருக்கு மாத்திரமே வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.

இதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 7ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தொடரும் என அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

இன்றைய தினத்திற்கு பின்னர் எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அன்றைய தினமே இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர், எதிர்வரும் மாதம் 4ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், அன்றைய தினமே இரவு 11 மணி மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மேலும் ,இவ்வாறு 4ம் திகதி அமல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 7ம் திகதி வரை அமலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.