தனது மனைவி மரணத்தை அறிந்த அருண்ராஜா மருத்துவர்களின் அனுமதியோடு கவச உடை அணிந்து வந்து மனைவிக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். சிந்துஜாவின் உடலுக்கு நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். கவச உடையுடன் வந்து மனைவியின் உடலை பார்த்து கதறிய அருண்ராஜாவை கட்டியணைத்த உதயநிதி ஸ்டாலின், கண்ணீர்மல்க ஆறுதல் கூறினார்.