மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை  முதல் ஆட்டத்தில் டெல்லியிடம்  7 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது. அதன் பிறகு ‘ஸ்பார்க்’ தெறிக்க   பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. அதே உற்சாகத்துடன் தோனி தலைமையிலான சிஎஸ்கே இன்று பெங்களூரை எதிர்கொள்கிறது.