கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடைலை அடுத்து தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கீழ்வருமாறு அவரை குறிப்பிட்டார்.

இலங்கை மக்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள். ஆகவே கொரோனா பரவாமல் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும். அவர்கள் அதை செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

மேலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் புத்தாண்டுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது. இலங்கை மக்களை மீண்டும் அவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயாரில்லை.

வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. எனினும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.