சித்திரை புத்தாண்டு காலப் பகுதிக்கு பின்னர்,கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹஷித்த அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி,ஐ.டி.எச் வைத்தியசாலையில் தற்போது 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டவர்களும் இவர்களில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை, கடந்த காலங்களில் விடவும் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும்,நாட்டு மக்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செயற்படுவது அத்தியாவசியமானது என ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹஷித்த அத்தநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.