சமூக ஊடகங்களில் போலிப் புகைப்படத்தை வெளியிட்டதற்காகச் சீனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) வலியுறுத்தியுள்ளார்.

 

ஆஃப்கானிஸ்தானியக் (Afghanistan) குழந்தையின் கழுத்தில் அவுஸ்திரேலியப் படைவீரர் கத்தியை வைத்திருக்கும் காட்சி குறித்த புகைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அந்தப் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார்.

 

அதை அகற்றும்படியும், இரு நாட்டு உறவின் பதற்றத்தை சீனா எவ்வாறு கையாள்கிறது என்பதை உலக நாடுகள் கவனிப்பதாகவும் பிரதமர் மொரிசன் குறிப்பிட்டார்.

 

ஆஃப்கானிஸ்தானில் போர்க் குற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, அவுஸ்திரேலியப் படைவீரர்கள் 13 பேர் கடந்த வாரம் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.