ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான முதற்கட்டமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன் 350,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இரண்டாவது செலுத்துகைக்காக கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.