தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். தனக்கு எந்த விதமான கதாபாத்திரம் கிடைத்தாலும், அதை சிறப்பாக எடுத்து நடிப்பார்.

என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன்பின் தடம் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. மேலும் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இட்லி கடை. இது தனுஷ் இயக்கும் 4வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்தியா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் அருண் விஜய், எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அருண் விஜய் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.