ஹமில்டனில் காணாமல் போன 9 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜாஸ்மின் என்ற குறித்த சிறுமி இன்று பிற்பகல் ஹமில்டனில் உள்ள Fairfield பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஸ்மினைப் பார்த்தவர்கள் அல்லது அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்