சில துறைகளின் அடிப்படையில் வர்த்தகர்களை வகைப்படுத்தும் வேலைத்திட்டம் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

 

அதன்பின்னர் , குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு செய்து, மெனிங் வர்த்தக நிலையத்தின் கடைகள் வழங்கப்படும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

 

இதேவேளை பேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

 

மேலும் ,இந்த கட்டடத் தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டாலும், இன்னமும் கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகின. இவற்றில் உண்மை இல்லையென அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்தார்.