இலங்கை
இலங்கை மதுவரி திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை மதுவரி திணைக்களம் வருமானம் ஈட்டும் திணைக்களமாக இருந்தாலும், திணைக்களத்தில் தற்போதுள்ள பழைய முறைமைகள் அதன் வருவாய் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிவதில் பயனற்றவையாக இருப்பதால், வருவாய் கசிவு மற்றும் முறைகேடுகள் போன்ற திறமையின்மைகள் ஏற்படுகின்றன.
இதற்கமைய, ஏனைய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இதன்படி, இலங்கை மதுவரி திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமையொன்றை அறிமுகம் செய்வதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் முகமாக மிகவும் வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நோக்குடன் அனைத்து தரவு பரிமாற்றம், இடர் மேலாண்மை மற்றும் வருவாய் ஒப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.