இந்தியா: தமிழ்நாடு

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று (மார்ச் 15) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நேற்று மாலை கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வந்தார்.

உதகை தீட்டுக்கல் தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அவரை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் திமுகவினர் வரவேற்றனர்.

அப்போது, அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சோதனையிட்டனர். சோதனை முடியும் வரை அமைச்சர் உதயநிதி அங்கு நின்றார். பின்னர், காரில் தங்குமிடத்துக்கு சென்றார். இரவு உதகையில் தங்கும் அவர், இன்று மதியம் 12 மணியளவில் ஏடிசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.