இலங்கை

7 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு (visa-free entry) நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி இலங்கைக்கு வருவதற்கான கால அவகாசம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த இத்திட்டம், ஏப்ரல் 30-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.