தாய்வானின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியுள்ள பாரிய பூமியதிர்வு ( 7.2) தொடர்ந்து ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜப்பானின் தென்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானின் கிழக்கு நகரமான ஹவாலியனில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோவிலிருந்து தென்பகுதியில் ஆயிரம் மைல்தொலைவில் உள்ள ஒகினாவாவை சுனாமி அலைகள் தாக்ககூடும் என ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்களை கடலோரபகுதிகளிற்கு செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள் தாழ் நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பானின் யொனாகுனி என்ற தீவை சிறிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.