கடந்த 33 ஆண்டு காலமாக இந்திய அரசியலில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (manmohan-singh) இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார்.

இந்த நிலையில் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக
மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி (sonia gandhi) பதவியேற்கிறார்.

அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளனர்.