Northland இல் Waipu என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Waipu, Cove வீதி சுற்றுவட்டார பகுதிகளை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை பொலிஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் ஆக்லாந்தில் உள்ள ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் Whangārei மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தி நிருபர் - புகழ்