ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படம் வசூலில் சாதனை படைத்தது. அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பலர் நடித்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், ‘கோட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புஅல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8 ஆம் திகதி வெளியாகும் என்று தெரிகிறது.