உலக நாடுகள் பலவும் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன. இதன்படி, அமெரிக்காவில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 

இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.