ஆக்லாந்தில் உள்ள மதுபானக் கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு முன்னதாக Wynyard Quarter என்ற இடத்தில் உள்ள ஒரு மதுபானக் கடையை உடைத்து நால்வர் மது பாட்டில்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றதாக இன்ஸ்பெக்டர் டேவ் கிறிஸ்டோபர்சன் கூறினார்.

இதனையடுத்து 13 மற்றும் 18 வயதுடைய ஏழு இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் ஆறு வாலிபர்கள் இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மேலும் கடையில் இருந்து எடுக்கப்பட்ட மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்