நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 3399 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2068 மீண்டும் தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர்.
இது மார்ச் 25 திங்கள் முதல் மார்ச் 31 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.
மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 07 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு நிலவரப்படி 168 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்
#Arasannz #Covidupdatenz #Nznews #Nz #COVID19 See less