இலங்கை

தாய்லாந்தில் இருந்து 4 வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானம் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானத்தில் தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விமானத்தில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெறும் எனவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.