மார்ச் 19 அன்று Titirangi இல் ஒரு பள்ளி மாணவியை தவறான முறையில் அணுகியதாகக் கூறப்படும் 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மேகன் கோல்டி இது தொடர்பில் கூறுகையில், கடந்த பல மாதங்களாக மேற்கு ஆக்லாந்து பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஏப்ரல் 5 ஆம் திகதி Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்