வைகாடோவில் சிறு குழந்தைகளிடையே தட்டம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக Te Whatu Ora (Health NZ) தெரிவித்துள்ளது.
குறித்த குழந்தைகள் மார்ச் 23 மற்றும் 26 க்கு இடையில் ஆக்லாந்து, வைகாடோ மற்றும் டவுரங்காவில் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு உள்நாட்டிலேயே தொற்று நோய்க்குள்ளாகி உள்ளதாக நம்பப்படுகிறது என்று தேசிய பொது சுகாதார சேவை மருத்துவ இயக்குநர் டாக்டர் வில்லியம் ரெய்ங்கர் கூறினார்.
அம்மை நோயைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நோயெதிர்ப்பு நிலையை அறிந்திருக்குமாறு நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம், மேலும் நிச்சயமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
தடுப்பூசி இலவசம், இது உங்கள் சுகாதார வழங்குநரிடமிருந்து கிடைக்கும். நோய் அறிகுறிகள் உள்ள எவரும் மருத்துவரிடம் செல்வதற்கு முன் வீட்டிலேயே இருந்து ஆலோசனை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் முதல் 18 நாட்களுக்குள் அம்மை நோயின் அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று Te Whattu Ora தனது இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் சிவந்த கண்கள் ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்