காசாவில் போர்நிறுத்தத்திற்கு நியூசிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுக்கக் கோரி மத்திய ஆக்லாந்தில் Aotea சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பதை எடுத்துக்காட்டும் விதமாக அவர்கள் அனைவரும் கையில் வெற்று தட்டுகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் போர் நடந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மக்களைப் பாதிக்கும் கடுமையான உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலிய குடிமக்கள் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் தொடங்கியது, இஸ்ரேல் விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைப்படைகளுடன் பதிலடி கொடுத்தது.

காசாவுக்குள் உணவு உதவிகளை அனுப்ப முயற்சித்த நியூசிலாந்து நாட்டினர், அதை அங்கு கொண்டு செல்வது ஒரு போராட்டமாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்