Blenheim இன் வடமேற்கில் உள்ள Okaramio என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 க்கு முன்னதாக மாநில நெடுஞ்சாலை 6 இல் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்