வெலிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளி மற்றும் தமிழ்ப் பூங்காவின் பரிசளிப்பு விழா நேற்றைய தினம் இடம்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு போட்டி கவிதை போட்டி‌ போன்ற பல போட்டிகள் மற்றும் தேர்வுகள் இந்த பள்ளியில் நடத்தப்படுகிறது.

அவற்றில் பங்குபற்றிய வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்த பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த பள்ளியின் தற்போதைய‌ அதிபர் தேவகி ராஜகுமாரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பள்ளியின் முன்னாள் அதிபர் நிர்மலா இளமுருகன், பள்ளியின் வளர்ச்சியை பற்றி கூறியதுடன், இயல் இசை நாடகம் அடங்கிய முத்தமிழ் விழாவை வருடந்தோறும் வெலிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பள்ளியில் அரங்கேற்றுவதாக கூறினார்.

மேலும் இந்த பள்ளியில் சேவையாற்றியது தொடர்பில் தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த பரிசளிப்பு விழாவில் பரிசுகளை வென்ற மாணவர்கள் கூறுகையில் தமிழ் மீது உள்ள ஆர்வத்தையும் தமிழை கற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் தங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.