சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முதன்மை பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை சீரியல் நடிகை நேஹா காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

’பைரவி’ ’பிள்ளை நிலா’ ’வாணி ராணி’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்களை நடித்துள்ள இவர் தற்போது பாக்கிய லட்ஸ்மி எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

இது விடயமாக நடிகை நேஹா குறிப்பிட்டுள்ளதாவது...

நான் பொதுவாக கிரிக்கெட் பார்ப்பதில்லை, எப்போதாவது ஒரு தடவை பார்ப்பேன், அப்போதுதான் ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது, பத்திரான குறித்து கேள்விப்பட்டேன்.

அவரது பந்து வீச்சு எனக்கு பிடித்திருந்ததால் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை நானும் பகிர்ந்தேன். இதனை வைத்து தான் நான் அவரை காதலிப்பதாக சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் ஜாலியாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் விஷயம் விபரீதம் ஆகி வருவதை அடுத்து விளக்கம் அளிக்கிறேன்.

உண்மையில் நான் பத்திரனாவை நேரில் பார்த்தது கூட கிடையாது, அவர் எப்படிப்பட்டவர் என்பதும் எனக்கு தெரியாது, நான் அவரை காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.