இந்தியா: தமிழ்நாடு

கோவையில் திமுக எம்.பி. கனிமொழி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "போதைப் பொருட்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிக்கியது.

குறிப்பாக குஜராத் துறைமுகத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. அந்த துறைமுகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த போதைப் பொருள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியே வரவில்லை. அது தொடர்பான விசாரணை நடக்கிறதா இல்லை, அதையும் முடித்துவிட்டனரா என்பதும் தெரியவில்லை என்றார்.

அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் 60% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பேசியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "60 வாங்கலாம், 90 வாங்கலாம், நூறு சதவீதம்கூட வாங்கலாம். அவ்வாறு கனவு காண்பது அவருடைய உரிமை. ஆனால், வெற்றி நிச்சயமாக திமுகவுக்குத்தான் என அவர் தெரிவித்தார்.