வெள்ளிக்கிழமை இரவு ஆக்லாந்தின் Viaduct துறைமுகம் அருகே நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 7.30 மணியளவில் Lower Hobson தெருவிற்கு அருகில் உள்ள அடுக்குமாடி பால்கனியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் அங்கு வந்ததும், மோதலை அடக்க பெப்பர் ஸ்பிரேயைப் பயன்படுத்தினர்.

இதனிடையே இந்த சம்பவத்தின் பொது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் ஆனால் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சண்டையைத் தொடர்ந்து சிலருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்